என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமபுற பகுதியில் உலா வரும்  யானையால் பொதுமக்கள் பீதி
    X

    காட்டு யானைகளை படத்தில் காணலாம்.

    கிராமபுற பகுதியில் உலா வரும் யானையால் பொதுமக்கள் பீதி

    • ஒரு மாதத்திற்கும் மேலாக 3 காட்டு யானைகள் சுற்றி வருகிறது.
    • மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள மாந்தோட்டத்தில் யானைகள் முகாம்.

    காரிமங்கலம்,

    காரிமங்கலம் அருகே மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள மூன்று காட்டு யானைகளை துரத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த எலுமிச்சன அள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 3 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    இந்த யானைகள் கரும்பு தோட்டத்தை நாசம் செய்து வரும் நிலையில் யாருக்கும் எந்தவித தொந்தரவும் அளிக்கவில்லை. வனத்துறையினர் மூன்று யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று அதிகாலை காரிமங்கலம் நகரப் பகுதியில் உள்ள அருணேஸ்வரர் மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள மாந்தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள் வனத்துறையினர் மற்றும் போலீசார் விரட்டிய நிலையில் அந்த யானைகள் சஞ்சீவராயன் மலைப்பகுதியில் முகாமிட்டு உள்ளன.

    இந்த மூன்று யானை களையும் வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருவதுடன் இரவு நேரத்தில் மலைப்பகுதியில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    Next Story
    ×