என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை: எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
- பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
- வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பொன்னேரி:
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Next Story






