என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் குடோனில் பதுக்கிவைத்த  ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்  குடோன் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது
    X

    சேலத்தில் குடோனில் பதுக்கிவைத்த ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் குடோன் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகையிலை பொருட்கள் பதுக்கி கடைகளில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப் பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி கடைகளில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து குடோனில் சோதனை நடத்தினர்.

    அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 30 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனைக்காக பயன்படுத்தி வந்த கார், டூ வீலரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த ஹிதீஷ்குமார் (39), சரவணக்குமார் (28) வரஜிங்ராம் (24) சிறுவன் மற்றும் குடோன் உரிமையாளர் அன்பழகன் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×