என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுருளி ஆற்றில் நாட்டு இன மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
சுருளியாற்றில் நாட்டு மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
- அரசு மீன் குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அந்த மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு இருப்பு செய்யும் திட்டமாகும்.
- இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் நாட்டு இனகெண்டை மீன்களின் இருப்பு அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டம் சுருளி ஆற்றுப்பகுதியில் நாட்டு இன மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் பணியினை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன், பிரதான் மந்திரி சம்படா யோஜனா திட்டம் 2021-22 இன் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது நாட்டு இன மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்திய பெருங் கெண்டை, கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினை மீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு மேட்டூர் அணை, பவானிசாகர் அணை தஞ்சாவூர், மற்றும் மணிமுத்தாறு அணை ஆகிய அரசு மீன் குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அந்த மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு இருப்பு செய்யும் திட்டமாகும்.
இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அழிந்து வரும் நாட்டு இன மீன் இனங்களை பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை பேணுதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, வைகை ஆற்றில் 40 ஆயிரம் மற்றும் சுருளி ஆற்றில் 1.18 லட்சம் என மொத்தம் 1.58 லட்சம் நாட்டு இன மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் நாட்டு இனகெண்டை மீன்களின் இருப்பு அதிகரிக்கப்படும் என ெதரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, வீரபாண்டி பேரூராட்சிப் பகுதியில், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






