என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 3-வது முறையாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
    X

    வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

    வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 3-வது முறையாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

    • வடமதுரை பகுதிகளில் 3-வது முறையாக சார்பதி வாளர் அலுவலகத்தை பற்றி செய்திகளை ஒட்டி உள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    வடமதுரை சார்பதி வாளர் அலுவலகத்திற்கு வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் இருந்து ஏராள மான பொதுமக்கள் பத்திர பதிவுக்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று தமிழக மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் வடமதுரை பகுதிகளில் 3-வது முறையாக சார்பதி வாளர் அலுவலகத்தை பற்றி செய்திகளை ஒட்டி உள்ளனர். அதில் வில்லங்கச் சான்று வழங்குவதற்கும், பழனி பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக த்தில் பணம் கேட்பதாகவும் அங்கு பணிபுரியும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆண்டுகளில் விண்ண ப்பித்தவர்களுக்கு வில்லங்கச் சான்று வழங்கா மல் இழுத்தடிப்பதாகவும், ஆண்டாய்வு தணிக்கை ஆய்வை எப்படி முடித்தா ர்கள் என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருபவ ர்கள் கலக்கமடைந்துள்ள னர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×