என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மாதிரி பள்ளிக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன கணினி ஆய்வகம்
- 10 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் 100 சதவிதம் தேர்ச்சியை பெற்று வருகிறது.
- பள்ளியில் கணினி ஆய்வகங்கள் மற்றும் மிதிவண்டிக்கான நிழல்கூடம் இடத்தை திறந்து வைத்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள திப்பனப்பள்ளி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 450 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் 100 சதவிதம் தேர்ச்சியை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த அரசு பள்ளியின் வளர்ச்சியை கண்டு பெங்களூரில் இயங்கி வரும் தனியார் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச அதிநவீன 10 கணினி மற்றும் கணினி ஆய்வகம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி நிறுத்தும் இடமும் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனியார் அறக்கட்டளை சார்பாக பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளியில் கணினி ஆய்வகங்கள் மற்றும் மிதிவண்டிக்கான நிழல்கூடம் இடத்தை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இந்த பள்ளி கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியில் 100 சதவீதம் பெற்று வந்ததை எடுத்து அறக்கட்டளை சார்பாக தமிழ்நாட்டின் முதல் பணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிக்கு 15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற உதவிகளை வழங்கி அறக்கட்டளைக்கு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர் சார்பாக நன்றிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






