search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி
    X

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு தட்சணமாற நாடார் சங்க தலைவரும், மாவட்ட சதுரங்க கழக தலைவருமான ஆர்.கே. காளிதாசன் பரிசுகள் வழங்கினார்.

    தென்காசியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி

    • போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பாக பொதிகை சதுரங்க கோப்பை மாநில சதுரங்க போட்டி தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நெல்லை வீரர் முதலிடம்

    போட்டியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் பொது பிரிவு மற்றும் 9, 11, 13, 17 ஆகிய வயது பிரிவுகளில் தனித்தனியாக 6 சுற்றுகள் நடைபெற்றது.

    போட்டியை எம்.கே.வி.கே. பள்ளி தாளாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் ஜீவக்குமார் தலைமையில் தேனி சையது மைதீன், மேனகா, சதீஷ்குமார், ராஜாகாந்தன், வைதேகி, தமிழ்ச்செல்வி ஆகியோர் நடுவர் குழுவாக செயல்பட்டனர். நெல்லை மாவட்ட வீரர் ஸ்கேனி முதலிடம் பெற்று பொதிகை கோப்பை சாம்பியன் பரிசை வென்றார். தென்காசி மாவட்ட வீரர்கள் சபின், விஷால், ரித்திக் ரக்சன், ஷாம் ஜெப்ரி, மதுரை மாவட்ட வீரர் பாலன் வைரவன் ஆகியோர் முதல் 5 இடங்களை பெற்றனர்.

    பொதிகை சாம்பியன் கோப்பை வென்ற வீரருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசுடன் சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. மாண வர்கள் பிரிவில் பிரித்வி, ஹரிஷ் லிங்கம், அஸ்வத், முகமது அசில், மாணவிகள் பிரிவில் பிரதிக்ஷா, ராஜ லட்சுமி, யாமினா, தார ணிகாஸ்ரீ ஆகியோர் அவ ர்கள் வயது பிரிவில் முத லிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தட்சண மாற நாடார் சங்க தலை வரும், மாவட்ட சதுரங்க கழக தலைவருமான ஆர்.கே. காளி தாசன் பரிசுகள் வழங்கினார்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் அழகேசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பால சுப்பிரமணியன், குல சேகரபட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மணி வண்ணன், தென்காசி மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், நெல்லை நகர சதுரங்க கழக செய லாளர் கருணாகரன், சதுரங்க கழக ஆர்வலர்கள் கமலக்கண்ணன், அருணா ச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சதுரங்க கழக இயக்குனர் எஸ்.கண்ணன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

    Next Story
    ×