என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரையில் மாநில சிலம்பாட்ட போட்டி:  வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு
    X

     சிலாம்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுடன் ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா அட்வின்.

    ஊத்தங்கரையில் மாநில சிலம்பாட்ட போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு

    • கிருஷ்ணகிரியில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
    • அரசு மற்றும் மெட்ரிக் பள்ளியில் இருந்து சுமார் 750 மாணவ, மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின் பேரில் கிருஷ்ணகிரியில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அரசு மற்றும் மெட்ரிக் பள்ளியில் இருந்து சுமார் 750 மாணவ, மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் ஊத்தங்கரை பேரொளி சிலம்பப்பள்ளி யில் பயின்ற மஹாலக்ஷ்மி, ரோஹிணி, ஏஞ்சல், நிஷாந்தன், கிரி, தினேஷ், வேடியப்பன், தரனிஷ், பிரசாந்த் ஆகிய 9 மாணவ, மாணவிகள் முதலிடமும், ப்ரீத்தா, மதிசுவேதா, தனுஸ்ரீ, ஆகிய 3 மாணவ மாணவிகள் இரண்டாமிடமும், அரவிந்த், கோகுல், மோனிகா, பிரேம்குமார், சிவப்ரியா, தீபலக்ஷ்மி, தமிழ்மணி, ஸ்ரீலக்ஷ்மி ஆகிய 8 மாணவ மாணவிகள் மூன்றாமிடமும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். இதில் முதலிடம் பெற்ற 9 மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டும் வகையில் ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானத்தில் சான்றிதழ் வழங்கி பாராட்டும் விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டார். ஊத்தங்கரை மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் நினைவுப்பரிசுகளை ஜே.ஆர்.சி. கணேசன் வழங்கினார். பேரொளி சிலம்பப்பள்ளி ஆசான் சதாசிவம், மற்றும் விழாவை சிறப்பித்த அழைப்பாளர்கள் அனைவருக்கும் செடி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊத்தங்கரை அரசு மைதானத்தின் பொறுப்பாளர் அந்தோணி, தலைமை ஆசிரியர் வீரமணி, உதவி தலைமை ஆசிரியர் ஜே.ஆர்.சி. கணேசன், ஏ.ஆர்.எஸ். ராஜவேல், எம்.எஸ்.எம். சுரேஷ், கணபதி குணசேகரன், உடற்கல்வி ஆசிரியர் திருப்பதி, யூத் ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பாக பென்சிகர், கார்த்திக்,ஜீவா, சுகுணாவிலாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிலம்பம் மாஸ்டர் சதாசிவம் செய்திருந்தார்.

    Next Story
    ×