என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற போது சாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.
மத்தூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமதே ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

- மத்தூரில் ஸ்ரீதேவி,பூதேவி சமதே ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
- காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இரண்டாம் சனிக்கிழமையொட்டி ஸ்ரீனிவாசா பெருமானுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடை பெற்றது.
முன்னதாக பெருமாளுக்கு கோ பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கோவில் வளாகத்தில் திருவிளக்கேற்றுதல், படி கொடுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்த்தர்களுக்கு புரோகிதர்களால் முதல் மரியாதை செலுத்தியும், மேள தாளங்களுடன் பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக ஸ்ரீ சோமேஸ்வர் ஆலயத்திற்கு சென்று அங்கு அம்மையப்பரை சிறப்பு பூஜைகளுடன் கொண்டு வரப்பட்டன. இத்திருக்கல்யாண விழாவில் தம்பதியினருக்கு மாங்கள்ய பூஜையும் நடைபெற்றன.
திருக்கல்யாண திருமணத்தில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என இந்துக்கள் முறைப்படி புரோகிதர்களால் வெற்றிலை தாம்பூலம் மாற்றிக் கொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
ஸ்ரீனி வாச பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தயாரின் திருக்கல்யாண நிறைவுடன் பக்தர்களல் மொய் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதளையடுத்து ஸ்ரீனிவாச பெருள், ஸ்ரீதேவி, பூதேவி வீதி உலா நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், ஊர் தலைவர் ஊர் பெரியதானக்காரர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.