என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஸ்ரீ படைவீட்டு அம்மன் சிலை கண் திறப்பு விழா
  X

  ஸ்ரீ படைவீட்டு அம்மன் சிலை கண் திறப்பு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார்.
  • பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

  பாலக்கோடு,

  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள குத்தல அள்ளி கிராமத்தில் ஸ்ரீ படைவீட்டு அம்மனின் புதிய சிலை நிறுவப்பட்டு அம்மன் கண் திறப்பு விழா மற்றும் மகா கும்பாபிஷேக திருவிழா நடைப்பெற்றது.

  இந்த விழாவானது கணபதி பூஜையுடன் தொடங்கி கலச ஆராதனை, பஞ்ச சூக்தஹோமம், திருமுறை பாராயனம், வேத பாராயனம், ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, புண்ணிய கவசனம், சோமகும்ப பூஜை, ரக்க்ஷாபந்தனம், துர்காசாஸ்திர நாமம், மகாசாந்திஹோமம், பூர்ணாஹநிதி உள்ளிட்ட யாகங்கள் நடைப்பெற்றது.

  இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்த குடங்களை தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார்.

  பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து அம்மன், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப் பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

  Next Story
  ×