என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் நாளை விளையாட்டு போட்டிகள்
- கூட்டுறவு வார விழா கொண்டாடுவது குறித்து குழுக் கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான விழா சிறப்பாக நடத்தி வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அறையில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2022 முதல் 20.11.2022 வரை கொண்டாடுவது குறித்து குழுக் கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டுறவு கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், உறுப்பினர் கல்வித் திட்டம், இளைஞர் ஈர்ப்பு முகாம், கூட்டுறவு தயாரிப்புகள் விற்பனை மேளா, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவது என்றும் வனத்துறை அமைச்சர் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான விழா சிறப்பாக நடத்தி வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு சரக துணைப்பதிவாளர் மது, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முத்து சிதம்பரம், ஆவின் பொதுமேலாளர் வெங்கடாசலம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வரும் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று காலை ஊட்டியில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு சங்க பணியாளர்களும் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கூட்டுறவு வார விழாக்குழுவின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






