என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஸ் அகாடமிக்கு நிதியுதவி
- இடைகாலில் சாம்பியன் செஸ் பயிற்சி மையம் 15 வருடங்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சதுரங்க பயிற்சி அளித்து வருகிறது.
- மாணவர்களுக்கு 20 சதுரங்க பலகைகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு கலெக்டர் ஆகாஷ் தன்விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் இடைகாலில் சாம்பியன் செஸ் பயிற்சி மையம் 15 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சதுரங்க பயிற்சி அளித்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று மாணவர்களுக்கு 20 சதுரங்க பலகைகள் மற்றும் 2சதுரங்க கடிகாரங்கள் வாங்குவதற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தன்விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையினை பயிற்சியாளர் இசக்கியிடம் வழங்கினார்.
Next Story






