search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு.

    கும்பகோணம் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இக்கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது.
    • நிகழ்ச்சியில் சாரநாத பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்தார்.

    கும்பகோணம்:

    வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3-வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவிலின் உள் பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இந்த கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து தரிசித்தனர்.

    இது போல் கும்பகோ ணம் அருகே உள்ள திருச்சேறையில் சாரநாயகி சாரநாத பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ தலங்களில் 12-வது தலமாக போற்றப்படும் இந்த கோவில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக பரமபத வாசல் உள்ள சிறப்பு பெற்ற ஸ்தலம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாரநாத பெருமாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    அப்போது வேத மந்திரங்கள் முழங்க ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் சாரநாத பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்தார்.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×