என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்
- பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்
- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அட்டைகள் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் மைதானத்தில் முதலமை ச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு பதிவு சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஒய் பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.
முகாமில், ஓசூர் தொகுதிக்குட்பட்ட பலர், குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை காண்பித்து பதிவு செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பகுதிகளாக நடைபெற்று வரும் இந்த சிறப்பு சேர்க்கையில், ஓசூரில் மட்டும் 110 குடும்ப அட்டை பயனாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






