என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி
- தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடைப்பெற்றது.
- 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
தருமபுரி,
தருமபுரி அருகே தனியார் மண்டபத்தில் 41-வது தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடைப்பெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என 6 வயது முதல் 23 வயது வரை பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக அலுவலர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
Next Story






