என் மலர்
உள்ளூர் செய்திகள்

மெய்யம்பட்டியில் நல்லபாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்.
நத்தம் அருகே வீடுகளுக்குள் புகுந்த நல்லபாம்புகள்
- ஊராளிபட்டி எட்டையம்பட்டியை சேர்ந்தவர் வீட்டில் நல்லபாம்பு புகுந்தது.
- தீயணைப்பு வீரர்கள் வீட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர்.
நத்தம்:
நத்தம் அருகே ஊராளிபட்டி எட்டையம்பட்டியை சேர்ந்தவர் ஜான்சிரோசி (48). இவரது வீட்டில் நல்லபாம்பு புகுந்தது. இதை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் வீட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இதைப் போலவே மெய்யம்பட்டியில் சாத்தன் என்பவரது வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story






