என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்
போடி அருகே வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திருமலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது.
- தீயணைப்புத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ளது வீர காளியம்மன் கோவில் தெரு. இப்பகுதியில் வசித்து வரும் வீர சின்னம்மா என்பவர் தனது வீட்டில் இன்று காலை சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு சமையல் கட்டில் இருந்து வெளிவந்தது. இதை பார்த்ததும் பதறி அடித்து வெளியே வந்த வீர சின்னம்மாள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பரண் மேல் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட சுமார் 4 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Next Story






