search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.எம்.எஸ். அனுப்பி டிரைவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி
    X

    எஸ்.எம்.எஸ். அனுப்பி டிரைவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி

    • தேசியமய–மாக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கம் செய்யப்–படுவதாக சில தினங்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் வந்துள்ளது.
    • மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.14,756 மீட்டு மீண்டும் சரவணன் வங்கி கணக்கில் சேர்த்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அருகே உள்ள ஓமலூர் அடுத்த தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் மினி டெம்போ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் வந்துள்ளது. மேலும் அதில் உள்ள லிங்கை பார்க்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை உண்மை என்று நம்பிய சரவணன் அந்த லிங்கை பார்த்தபோது அதில் கேட்கப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20,236 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.14,756 மீட்டு மீண்டும் சரவணன் வங்கி கணக்கில் சேர்த்தனர்.

    Next Story
    ×