search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் ரெயில் பாதை அமைக்கும் பணி மும்முரம்
    X

    மானாமதுரை வைகை ஆற்றுப்பாலத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    மின் ரெயில் பாதை அமைக்கும் பணி மும்முரம்

    • மானாமதுரை-திருச்சி இடையே மின் ரெயில் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    • மதுரை-ராமேசுவரம் வரையும், திருச்சி- மானாமதுரை-விருதுநகர் வரை நடைபெற்றுவருகிறது.

    மானாமதுரை

    நாடுமுழுவதும் அனைத்து ரெயில் பாதைகளும் மின் மயமாக்கம் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதில் மதுரை-ராமேசுவரம் வரையும், திருச்சி- மானாமதுரை-விருதுநகர் வரை நடைபெற்றுவருகிறது.

    தற்போது ராமநாதபுரம் வரை மின் பாதையில் வாரம் ஒருமுறை செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் செல்கிறது. தினமும் சோதனை அடிப்படையில் மின்சார ரெயில் என்ஜின் இயக்கப்படுகிறது. மானாமதுரை-விருதுநகர் இடையே அமைக்கப்பட்ட மின்பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் ஆய்வு முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது திருச்சியிலிருந்து காரைக்குடி வரை மின்பாதை பணிகள் முழுவதும் முடிக்கப் பட்டுள்ளது.

    மீதமுள்ள காரைக்குடி - மானாமதுரை இடையே உள்ள பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இறுதி பணியாக மானாமதுரை வைகைஆற்றில் உள்ள ரெயில் பாலத்தில் சிறப்பு ரெயில் ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்தின் தூண்களில் மின் கம்பங்கள் அமைக்கும்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

    அதன் பின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் புதிய மின்பாதையில் அதி வேக ெரயிலை இயக்கி சோதனை நடத்துவார். இந்த பணி முடிந்தவுடன் நேரடியாக சென்னையில் இருந்து காரைக்குடி- மானாமதுரை வழியாக புதிய மின் பாதையில் விருதுநகர், கன்னியாகுமரி வரை செல்ல முடியும்.

    வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில்களும் மின் பாதையில் மானாமதுரை வரை வருவதால் பயணநேரம் குறைய வாய்ப்பு உள்ளது. மின்பாதை பணிகள் நிறைவுபெற்றவுடன் மானாமதுரை- காரைக்குடி வழியாக தென்மாவட்டங்களில் இருந்து கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களை சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு இயக்கவேண்டும் என சிவகங்கை மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×