search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லறைகள், கபர்ஸ்தான் அமைக்க இடம் தேர்வு செய்வதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்-சிவகங்கை கலெக்டர்
    X

    கல்லறைகள், கபர்ஸ்தான் அமைக்க இடம் தேர்வு செய்வதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்-சிவகங்கை கலெக்டர்

    • கல்லறைகள், கபர்ஸ்தான் அமைக்க இடம் தேர்வு செய்வதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.
    • சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லா மியர் சமுதாயத்தினர் இறந்த உடலை அடக்கம் செய்ய நீண்ட துாரம் எடுத்துச்செல்ல வேண்டி யிருப்பதால் அவர்கள் ஊருக்கு அருகில் கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலம் அமைக்க தேவைப்படும் தனியார் நிலத்தினை நேரடி பேச்சு வார்த்தை மூலம் கைய கப்படுத்த அரசாணைபடி ஒவ்வொரு கலெக்டர் தலைமையில் கொண்ட குழு அமைத்து உத்தர விடப்பட்டுள்ளது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லா மியர் சமுதாயத்தினரின் இறந்த உடலை அடக்கம் செய்ய தேவைப்படும் அடக்கஸ்தலங்கள் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க தேவைப்படும் தனியார் நிலத்தினை அரசாணையில் தெரிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேர்வு செய்யும் பொருட்டு கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றிட அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் சம்பந்தப்பட்ட இடங்களில் அரசு ஆட்சே பனை அற்ற அரசு நிலம் ஏதும் உபரியாக இருத்தல் கூடாது. கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலம் அமைக்க சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளின் தேவையின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தலாம்.

    கபஸ்தான் அமைப்பதற்கு உச்சபட்சமாக 1.5 ஏக்கர் வரையிலும் அடக்கஸ்தலம் அமைப்பதற்கும் உச்ச பட்சமாக 2 ஏக்கர் வரைநிலம் கையகப்படுத்த லாம்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டம் உள்ளிட்ட 9 வட்டங்களில் வசித்துவரும் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தினருக்கு தெரியப்படுத்தும் வகையில், தனியார் நிலம் வழங்கும் பட்சத்தில் சிவகங்கை மாவட்ட வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×