என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொது விநியோக குறைதீர் முகாம்
- பொது விநியோக குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் நாளை (14-ந் தேதி) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story






