search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்-நகர் மன்ற தலைவர் வலியுறுத்தல்
    X

    டெங்கு தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது.

    டெங்கு தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்-நகர் மன்ற தலைவர் வலியுறுத்தல்

    • தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    • ஆலோசனை கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் வலியுறுத்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் டெங்கு தடுப்பு குறித்து அதிகாரிகளுடனுனான ஆலோசனை கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் ஆணையாளர் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் பேசியதா வது:-

    பஸ் நிலையம், அம்மா உணவகம், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காலை மாலை வேளைகளில் நிலவேம்பு கசாயம் வழங் கப்பட வேண்டும். டெங்கு அறிகுறி உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காலியிடங்களில் குப்பைகள், சீமை கருவேல மரங்களை அகற்ற இடத்தின் உரிமையாள ருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சீமை கருவேல மரங்கள் இருந்தால் உடனே அகற்றப்பட வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப்படுத்த வேண் டும். அந்தந்த வார்டுகளில் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளும்போது வார்டு கவுன்சிலர்களிடம் பணியா ளர்கள் கையொப் பம் பெற்று வர வேண்டும். நகரில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ள போதிலும் மேலும் பரவாமல் தடுக்க மருத்துவர்கள் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தி டெங்கு தடுப்பு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    மேலும் தடுப்பு நடவ டிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட தொற்று நோய் தடுப்பு வல்லுனர் டாக்டர் கிருஷ்ண வேணி, வட்டார மருத்துவர் தினேஷ், நகர சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் பாண்டி ஆதிநாராயணன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×