என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூலக கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
- சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஒப்பந்ததாரர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, ராமதாஸ், விஜயக்குமார், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கோபி, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், வட்டசெயலாளர் அருண்குமார் தங்கவேலு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






