search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும்
    X

    செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும்

    • செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
    • தற்போது அகல ரெயில் பாதை வந்தபின் பல மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மானாமதுரையில் நின்று செல்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே ஜங்சன் ரெயில் நிலைய ம்ஆகும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது மானாமதுரையில் இருந்து திருச்சி, சென்னை, நெல்லை, கேரள மாநிலம் கொல்லம்வரை ரெயில் வசதி இருந்தது.

    புன்னியஸ்தலமாக உள்ள ராமேசுவரத்திற்க்கு மானாமதுரையில் இருந்து தான் ரெயில் வசதி உள்ளது. தற்போது அகல ரெயில் பாதை வந்தபின் பல மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மானாமதுரையில் நின்று செல்கிறது. ஆனால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பயணிகள் தென்மாவட்ட ஊர்களுக்கு செல்ல போதுமான ரெயில் வசதி இல்லை. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் திருச்சி சென்றால்தான் ரெயில் வசதிஉள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் தென்மாவட்டம் மற்றும் கேரளா செல்ல வேண்டுமானால் மதுரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் சரக்கு ரெயில்கள் மதுரை செல்லாமல் மானாமதுரை வழியாக குறைவான பயண தூரத்தில் செல்கிறது. சென்னையில் இருந்து செங்கோட்டை வரை மானாமதுரை வழியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது. இந்த ெரயிலை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த ரெயில் சேவை 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் பயணிகள் கூட்ட நெரிசலுடன் செல்லும் நிலை உள்ளது. சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு இந்த ஒரு ரெயில்மட்டுமே உள்ளது. தினமும் இயக்கப்பட்டால் 4 மாவட்ட பயணிகள் பெரிதும் பயன் பெற வாய்ப்பு உள்ளது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை அந்தியோதயா சிறப்பு ரெயில் விடப்பட்டது. நல்ல வரவேற்பு பெற்ற அந்த ரெயில் எவ்வித முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதால் மானாமதுரை வழியாக செங்கோட்டை -சென்னை மார்க்கத்தில் தினசரி ரெயில் சேவை இல்லாமல் உள்ளது. நிறுத்தப்பட்ட அந்தியோதயா சிறப்பு ரெயிலை தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரை இயக்கவேண்டும். இதனால் 10 மாவட்ட மக்களுக்கும் பயன்உள்ளதாக இருக்கும்.

    சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள் நடைபெற உள்ள மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வலியுறுத்த வேண்டும். சென்னை-செங்கோட்டை ெரயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×