என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாலை நேர உழவர் சந்தை திறப்பு
  X

  உழவர் சந்தையில் மூலிகை பொருட்கள் விற்பனை நடைபெறும் காட்சி.

  மாலை நேர உழவர் சந்தை திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பத்தூரில் மாலை நேர உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.
  • வேளாண் அலுவலர் காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.

  திருப்பத்தூர்

  சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நேரடியாக பயன் பெறுவதற்காக இந்த உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை செயல்பட்டு வருகின்றன. உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் சரக்கு கட்டணம் ஏதுமின்றி உழவர் சந்தைக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலம் தங்களது விளைநிலங்களில் இருந்து விளைந்த பொருட்களை கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றர்.

  மாவட்டத்தில் ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்கும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் உழவர் சந்தை மாலை நேர உழவர் சந்தையாக மாற்றப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகிறது.

  இந்த உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தையில் களத்தி அய்யனார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பால விநாயகர் மகளிர் சுய உதவி குழு, பண்ணை மகளிர் சுய உதவி குழுவினர் கடை அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

  இங்கு பாரம்பரிய அரிசி வகைகள், மரச்செக்கு எண்ணெய், சிறு தானியம் மற்றும் சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நாட்டுக்கோழி முட்டை, காளான் வத்தல், வடகம் மற்றும் மூலிகை பொருட்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

  உழவர் சந்தை திறப்பு விழாவில் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  மாலை நேர உழவர் சந்தைக்கு நுகர்வோர்கள் அனைவரும் வருகை புரிந்து பயன்பெறுமாறு வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுரேஷ் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் வணிகம் துணை இயக்குனர் சுரேஷ் தலைமை வகித்தார்.

  வேளாண் அலுவலர் காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார். வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி, புவனேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர்கள் காந்தி, ராகவன், காஜா, நாகராஜ், ராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×