search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிடாரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
    X

    பிடாரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

    • பிடாரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • இந்த விழாவில் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள வடக்கு வாசல் செல்வி என்ற பிடாரி அம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா நடந்தது.

    பக்தர்கள் பால்குடம், பூத்தட்டுகளை ஏந்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு நடைபயணமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். முன்னதாக பிடாரி அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    மாலை 6 மணி முதல் பால் குடங்களும், பூத் தட்டுகளும் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு சுமார் 15 கிலோ மட்டர் தொலைவில் உள்ள கொன்னையூருக்கு பக்தர்கள் தலையில் பூத்தட்டுகளை சுமந்தவாறு நடை பயணமாக புறப்பட்டு சென்றனர்.

    கோவில் மந்தை திடலில் கரகாட்டம், ஒயிலாட்டம்,நாதசுவர வாத்தியம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளானோர் பங்கேற்ற இந்த விழாவில் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×