search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
    X

    ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

    • வாராப்பூர் ஊராட்சியில் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • 3 கிலோ மீட்டர் தூரமுள்ள வாராப்பூருக்கு ரேசன் கடைக்கு சென்று வந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் உள்ள குறும்பலூர் கிராமத்தில் சுமார் 250 குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருட்களை வாங்க சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள வாராப்பூருக்கு ரேசன் கடைக்கு சென்று வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குறும்பலூர் கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அவரது சொந்த செலவில் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி துணை தலைவர் சித்ரா சுப்பையா, ஊர் முக்கியஸ்தர்களான வி.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன், ஆறுமுகம், வழுக்கையன், சின்னையா, சுப்பையா, கவுன்சிலர்கள் பழனிச்சாமி, வேங்கையன், ஆறுமுகம், சக்திவேல், ராசு, கரகமாடி சின்னையா, அழகு, பூசாரி மச்சக்காளை, சின்னையா, வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சொந்த செலவில் சடையம்பட்டி கிராமத்தில் 2, குறும்பலூர் கிராமத்தில் 4, வாராப்பூர் கிராமத்தில் 1 குளியல் தொட்டியும், இந்த பகுதியில் பகுதிநேர ரேசன் கடை கட்டிடங்களும் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டித் தரப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் வாக்குறுதி அளித்தார்.

    Next Story
    ×