என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேவர் பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை
- பேவர் பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது.
- சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி 21-வது வார்டு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டம் மூலம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமிபூஜையை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.
இதில் துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் அயூப்கான், சண்முகராஜன், விஜயகுமார், சி.எல்.சரவணன், ஆறுசரவணன், மகேஷ், மதியழகன், ஒப்பந்ததாரர்கள் தனசேகர், அமுதன் மற்றும் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story