என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேராசிரியர் க.ரவி
தர நிர்ணய குழுவின் மதிப்பீட்டில் அதிக புள்ளிகள் பெற நடவடிக்கை
- தர நிர்ணய குழுவின் மதிப்பீட்டில் அதிக புள்ளிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் ரவி உறுதியளித்தார்.
- அதன் அடிப்படையில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும்.
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 11-வது துணைவேந்தராக பேராசிரியர் க.ரவி நேற்று பொறுப்பேற்று கொண்டார். 3 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியை வகிப்பார். அவருக்கு பேராசிரியர்கள், அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்பு துணைவேந்தர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
அழகப்பா பல்கலை கழகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் கடை பிடிக்கப்படும். வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளும் வகையில் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.
சமூகத்திற்கு பயன்படும் வகையில் ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும். பல்கலைக்கழத்தின் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தேசிய தரநிர்ணய குழுவின் 4-ம் சுற்று மதிப்பீட்டில் அழகப்பா பல்கலைக்கழகம் அதிக புள்ளிகள் பெறுவதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்களின் ஒத்துழைப்போடு அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்புவிழா நடைபெறாததால் வேலைவாய்ப்பு பெறுவதில் மட்டுமன்றி, உயர்கல்வி பயில்வதிலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் மற்றும் தமிழக அரசு உயர்கல்வித்துறை அமைச்சர் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.அதன் அடிப்படையில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படும்.
ரூசா நிதி ரூ.100 கோடியில் ரூ.52 கோடி பெறப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கப்படுவார்கள். இதன் மூலம் அழகப்பா பல்கலை உலக அரங்கில் கொண்டு செல்ல முடியும்.
தொல்லியல் துறை, செயற்கை நுண்ணறிவு துறைகள் உருவாக்க முயற்சி எடுக்கப்படும். பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் மாணவர் எண்ணிக்கை அதிகப்படுத்த முயற்சி எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், சங்கரநாராயணன், கருப்புச்சாமி, முனைவர் குணசேகரன், பதிவாளர் (பொறுப்பு) ராஜமோகன், தேர்வாணையர் (பொறுப்பு) கண்ணபிரான், நிதி அலுவலர் பாண்டியன் மற்றும் முதன்மையர்கள், பேராசிரியர்கள் உடனிருந்தனர்.






