என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
17-வது பாரதிய திவாஸ் மாநாடு
Byமாலை மலர்12 Jan 2023 3:10 PM IST
- 17-வது பாரதிய திவாஸ் மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்றார்.
- இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.
நெற்குப்பை
மத்திய பிரதேசம் இண்டூரில் நடந்த 17-வது பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கயானா நாட்டு ஜனாதிபதி இப்ரான் அலி, சுரினாம் நாட்டு ஜனாதிபதி சான் சந்தோகி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையின் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக இந்த மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
X