என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழைக்காலம் என்பதால் வகுப்பறைகளை ஆய்வு செய்த பிறகே மாணவர்களை அனுமதிக்க வேண்டும்
- மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும்.
- நீரின் அருகில் பள்ளி மாணவர்கள் செல்லாமல் தடுக்க வேண்டும்.
கோவை:
மழைக்காலம் என்பதால் வகுப்பறைகளை தினமும் ஆய்வு செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கோவை முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.
இது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பூபதி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது-
கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், பள்ளி வளாகத்தில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சுவர் அருகில் மாணவர்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்க ப்பட்டிருக்கும் வகுப்பறைகளை பூட்டி வைக்க ேவண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளி வளாகங்களில் தேங்கி இருக்கும் நீரின் அருகில் பள்ளி மாணவர்கள் செல்லாமல் தடுக்க வேண்டும். தேவையில்லாத மரங்கள், புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். வகுப்பறைகளின் மேற்கூரைகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன்பாக வகுப்பறைகளை ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்த பிறகே மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.