search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்
    X

    புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

    • தருமபுரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.
    • உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

    தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனைகள், அபராதம் மற்றும் கடைக்கு சீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று மொரப்பூர் ஒன்றியம், கம்பைநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்பைநல்லூர், இருமத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் , மொரப்பூர் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரன் மற்றும் போலீசார் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கம்பைநல்லூர், இருமத்தூர் சாலை ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பீடா கடை, வகுரப்பம்பட்டியில் 2 மளிகை கடைகள் மற்றும் இருமத்தூரில் பள்ளி அருகில் ஒரு பெட்டி கடை மேலும் மருதுபட்டி சாலை - சுண்டைக்காய்பட்டியில் ஒரு மளிகை கடை என 5 கடைகளில் சோதனை நடத்தினர்.

    அங்கு விற்பனைக்கு இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் அடிப்படையில் கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கியதுடன் முதல் தகவல் அறிக்கை பதிந்த 3 கடையை தவிர்த்து முதல் முறையாக பிடிபட்ட சுண்டக்காய்பட்டி மளிகை கடைக்காரருக்கும் கம்பைநல்லூர் ஜங்ஷன் பகுதியில் மீண்டும் மீண்டும் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த பீடா கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து கடை மூடி சீல் வைத்தனர்.

    Next Story
    ×