என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:கைதான முதியவர் சிறையில் அடைப்பு
- 60 வயது முதியவர் நைசாகி பேசி சிறுமியை அவரது வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- சிறுமி அழுது கொண்டு வீட்டிற்கு வந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித் தனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் மனநலம் பாதிக்கப் பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்ற 60 வயது முதியவர் நைசாகி பேசி சிறுமியை அவரது வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமி அழுது கொண்டு வீட்டிற்கு வந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித் தனர்.அப்போது சிறுமி நடந்ததை கூறினார்.
உடனடியாக சிறுமியின் தாய் மாரண்ட அள்ளி போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story