என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சேலம் முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்
    X

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சேலம் முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்

    • சுப்பிரமணி (வயது 55). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
    • அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள துளசிமணியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

    இது குறித்து அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, கூலி தொழிலாளி சுப்பிரமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    சிறுமிக்கு ஆதரவாக அரசு தரப்பு வக்கீல் வாதாடினார். சுப்பிரமணிக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து சிறுமியின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×