என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் பல நாட்களாக தேங்கி கிடக்கும் சாக்கடை நீர்.
தொடர்மழையால் தேங்கும் கழிவுநீர் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு
- பலத்த மழையால் நகரில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகின்றன.
- வைரஸ் மற்றும் இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கொசுக்கள் உற்பத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் நகரில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகின்றன.
அந்த குழிகளில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக வைரஸ் மற்றும் இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கொசுக்கள் உற்பத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
சாலையில் ேதங்கி நிற்கும் மழைநீர் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. தொடர்மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் குப்பகைள்கூட முறையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குஆளாகி வருகின்றனர்.
எனவே மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் இதுபோன்ற பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.