search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமகிரிபேட்டை  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
    X

    நாமகிரிபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதையடுத்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
    • இதற்காக அவர்கள் காலி குடங்கள், கியாஸ் சிலிண்டர், தட்டுமுட்டு சாமான்களை சுமந்து வந்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதையடுத்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதற்காக அவர்கள் காலி குடங்கள், கியாஸ் சிலிண்டர், தட்டுமுட்டு சாமான்களை சுமந்து வந்தனர். போராட்டத்திற்கு வி.சி.க. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழ மணிமாறன் தலைமை தாங்கினார்.

    நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கபிலன், மாவட்ட துணைச் செயலாளர் நீல வானத்து நிலவன், ராசிபுரம் தொகுதி செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் நகர துணை செயலாளர் சுகுவளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் கனகராஜ், வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாளர் செங்குட்டுவன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொருளாளர் தங்க வளவன், மங்களபுரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டம் நடத்தியவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் கலையரசன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் மற்றும் சுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

    Next Story
    ×