என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
ஓசூரில் தொடர் அன்னதானம்: உதவி-கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஓசூர்,
தமிழக அரசின் உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தொடர் அன்னதான நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஓசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் சார்பில் தேர்பேட்டை பச்சைக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.
இதில் ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், தொடர் அன்னதான நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சந்திர சூடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சாமிதுரை வரவேற்று பேசினார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர் சின்னசாமி, ஆய்வாளர்கள் சக்தி, பூவரசன், கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் மற்றும் சசிகுமார் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் வள்ளலார் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு வள்ளலார் அகவல் பாராயணம், அருட்பெருஞ்ஜோதியின் மகிமை சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நாளை (திங்கட்கிழமை) வரை அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.






