என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி திண்டுக்கல்லில் தி.மு.க. வர்த்தகர் அணி சார்பில் அன்னதானம்
- திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மேற்கு ரத வீதியில் உள்ள திருலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றது.
- அன்னதானத்தில் இனிப்பு பொங்கல், புளியோதரை ஆகியவை 1000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மேற்கு ரத வீதியில் உள்ள திருலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து மாநில இணை செயலாளர் ஜெயன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது.
இதில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மண்டல தலைவர்கள் ஆனந்த், ஜான் பீட்டர், துணை அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பாளர் பொன்முருகன் செய்திருந்தார். அன்னதானத்தில் இனிப்பு பொங்கல், புளியோதரை ஆகியவை 1000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
Next Story






