என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பதிக்கு அனுப்புவதற்காக பூக்களை தொடுக்கும் பணியில் பெண்கள்.
சேலத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு 5 டன் பூக்கள் அனுப்பி வைப்பு
- வைகுண்ட ஏகாதசி ஒட்டி திருப்பதி வெங்கடாஜலபதி கோவி–லுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
- வைகுண்ட ஏகாதசி ஒட்டி சிறப்பு பூஜைக்கு, சேலத்தில் இருந்து 5 டன் பூக்கள் லாரியில் அனுப்பி வைக்கப்படுகிறது.
சேலம்:
ஸ்ரீ பக்தி சாரார் பக்த சபா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி ஒட்டி திருப்பதி வெங்கடாஜலபதி கோவி–லுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி திருப்பதி வெங்கடாஜலபதி கோவி–லில் நாளை வைகுண்ட ஏகாதசி ஒட்டி சிறப்பு பூஜைக்கு, சேலத்தில் இருந்து 5 டன் பூக்கள் லாரியில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்காக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில், ஏராளமான பெண்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற சாமந்தி பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவை லாரி மூலம் இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டு நாளை காலை திருப்பதி சென்றடையும் நிலையில், இந்த பூக்கள் சாமிக்கு அலங்காரம் செய்யப்படவுள்ளது.
Next Story






