என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி கலக்க போவது யாரு” புகழ் பாலாவுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கிய காட்சி.
எம்.ஜி.ஆர் கல்லூரியில் 'வைஃப் 5"கருத்தரங்கு
- எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
- பல்வேறு கல்லூரி மாணவர்கள் 342 பேர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி கணினி பயன்பாட்டுவியல் துறை சார்பில், 'வைஃப் 5" என்ற கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும், " நாட்டின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தைச் சார்ந்துதான் இருக்கின்றன. மக்களின் வாழ்வியலில் அறிவியல் சார்ந்த பொருட்கள் அதிக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மாணவர்கள் தொழில்நுட்ப கருவிகளைச் சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் சிவராமன் வரவேற்றார். இதில், முத்துராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு. தொழில் நுட்பத்தின் மையநோக்க மான மாணவர்களின் புத்திக்கூர்மை, தனித் தன்மை, படைப்பாற்றல் போன்றவை இன்றைய மென்பொருள் துறையின் போக்குக் குறித்தும் பேசினார்.
மேலும், இன்றைய வளர்ச்சிக்காலத்தில் சாட் ஜி.பி.டி.யின் அவசியம் குறித்தும், ஒவ்வாரு மாண வர்களும் தொழில்நுட்ப வளர்ச்சி ஓட்டத்தில் பின்பற்றி ஓட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாணவர்களின் செயல்திறனை உலக அரங்கில் கொண்டு செல்ல வும் அவர்களின் திறமை களை வெளிக்கொணரவும் ஒரு முத்தாய்ப்பாக, தனியார் தொலைகாட்சி "கலக்க போவது யாரு" புகழ் பாலா கலந்து கொண்டு, " மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை அடுத்தக்கட்ட நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும்? எதிர்த்து வரும் போராட் டங்களைச் சமாளிப்பது எப்படி? மாணவர்கள் அனைவரும் சகிப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று இயல்பாக நகைச்சுவையுடன் பேசினார்.
கருத்தரங்கின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மட்டு மின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் 342 பேர் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கான குறும்படம், நடனம், தப்மாஸ், புகைப்படம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
கருத்தரங்க ஏற்பாடு களை கணினி பயன்பாட்டி யல் துறை பேராசிரியர்களும், மாணவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.






