என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் விற்பனை
    X

    காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் விற்பனை

    • காதலர் தினத்தை முன்னிட்டு விலை உயர்வு இல்லை
    • சராசரி விலைக்கு தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் பலரும் தயாராகி உள்ளனர். இந்நிலையில் காதலன், காதலி தங்களது காதலை வெளிப்படுத்தும் போது ரோஜா பூக்களை கொடுப்பது வழக்கம். இதனால் ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும்.

    சந்தை மற்றும் பூக்கடைகளில் ரோஜாக்களின் விற்பனையும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் திருப்பூர் தென்னம்பாளையம் மற்றும் பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட்டிற்கு பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ரோஜாப்பூக்களின் விற்பனையும் மும்முரமாக நடந்தது.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:- காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களை அதிக அளவு விற்பனைக்காக வாங்கி குவித்து வைத்துள்ளோம். ஒரு கட்டு ரோஜாப்பூ ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு விலை உயர்வு இல்லை. சராசரி விலைக்கு தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

    Next Story
    ×