என் மலர்
உள்ளூர் செய்திகள்

நுரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
- போலீசார் தருமபுரி முடங்கேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- ஒரு யூனிட் அளவிலான நுரம்பு மண்ணை வெட்டி கடத்தியது.
தருமபுரி,
தருமபுரி பகுதியில் நுரம்பு மண்ணை சிலர் வெட்டி கடத்துவதாக டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் தருமபுரி முடங்கேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிலர் நுரம்பு மண்ணை டிப்பர் லாரியில் கடத்தி வந்தனர். உடனே போலீசார் அந்த வண்டியை வழிமறித்தனர். போலீசாரை கண்ட டிப்பர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அந்த வண்டியை போலீசார் சோதனை செய்ததில் ஒரு யூனிட் அளவிலான நுரம்பு மண்ணை வெட்டி கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு யூனிட் நுரம்பு மண்ணையும், கடத்தலுக்கு பயன்படுத்திபோலீசார் தருமபுரி முடங்கேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ய டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். தலைமறைவாக உள்ள டிரைவர், லாரி உரிமையாளர் ஆகிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.






