என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்திய கார் பறிமுதல்
- நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று வந்தது.
- கார் மற்றும் 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று வந்தது.
அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.
பின்னர் கார் மற்றும் 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






