என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரியில் கிரானைட் கற்கள் கடத்திய 2 பேருக்கு வலை
- அரசு அனுமதியின்றி கிரானைட் கற்கல் கடத்தல்
- லாரியை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் போலீஸ் சரகம் சின்ன மட்டாரப்பள்ளி பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி தலக்கோட்டை (வயது 42) என்பவர் பசவனப்பள்ளி பகுதியில் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்களை லாரி ஒன்றில் கடத்தி சென்றபோது தான் மடக்கியதாகவும், அப்போது லாரியை நிறுத்திவிட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் அங்கு சென்று லாரியை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் தப்பி ஓடியவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் சிவசங்கர், டிரைவர் ராஜசேகர் என்பது தெரிய வந்தது.
2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story