search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சன்புதூர் அருகே  எஸ்.டி.பி.ஐ. பொதுக்கூட்டம் -மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்பு
    X

    கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசிய காட்சி.


    அச்சன்புதூர் அருகே எஸ்.டி.பி.ஐ. பொதுக்கூட்டம் -மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்பு

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் வடகரை பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.
    • ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடையநல்லூர்:

    அச்சன்புதூர் அருகே வடகரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் வடகரை பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

    நகர தலைவரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான முத்து முகம்மது தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட துணைத்தலைவர் செய்யதுமஹ்மூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் முகம்மது ஒலி வரவேற்று பேசினார்.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் யாசர்கான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான், நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாவட்ட பேச்சாளர் பரக்கத் நிஷா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வார்த்தக அணி மாநில பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் ராஜபாளையம்-புளியரை நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும், குற்றாலம் அருவி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வடகரை பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் செங்குளத்தை (புதுக்குளம்) தூர்வாரி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளர் அப்துல் பாசித் நன்றி கூறினார்.

    Next Story
    ×