search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி பார்வை திட்டம்:  -கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    பள்ளி பார்வை திட்டம்: -கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • சென்னை மாவட்ட பள்ளிகளின் முன்னோடி திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது.
    • மாணவ, மாணவியருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி பார்வை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:&

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் அலுவலர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளியின் வகுப்பறை உற்று நோக்கலை வலுப்படுத்தும் வகையில் பள்ளிபார்வை செயலி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது திருவண்ணாமலை, சென்னை மாவட்ட பள்ளிகளின் முன்னோடி திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தை தற்போது கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வகுப்பறையில் கல்வி தரத்தின் உண்மையான நிலையை அறிய முடியும். ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் தரவுகளின் அடிப்படையில் அறியலாம். இந்த செயலி பள்ளியின் கற்றல் நிலை, ஆசிரியர்களின் திறனறிந்து நிர்வகிக்க கள அளவில் கண்காணிப்பு அலுவலர்களுக்கும் உதவியாக இருக்கும்.

    மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், வட்டார அளவிலான அலுவலர்களுக்கு இந்த நிர்வாக பயிற்சி வழங்கப்படுகிறது. இச்செயலியை பயன்படுத்தி மாணவ, மாணவியருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×