என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியல்
  X

  மங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திடீரென்று பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

  மங்கலம் :

  மங்கலம் அருகேயுள்ள பூமலூர்-பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்த்த மாணவர்கள் சாமளாபுரம், மங்கலம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் தங்களது பகுதிகளில் இருந்து அரசு பஸ்சுகளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

  ஆனால் கடந்த ஒரு மாதமாக அரசு பஸ்கள் உரிய நேரத்தில், பள்ளிப்பாளையம், பூமலூர் பகுதிகளுக்கு வருவதில்லை என தெரிகிறது. இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவதி அடைந்த மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் பள்ளிப்பாளையம் பகுதியில் திடீரென்று பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து விரைந்து சென்ற மங்கலம் போலீசார் மாணவர்கள்- பெற்றோர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தி உரிய நேரத்தில் பஸ் வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Next Story
  ×