என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் மாசிமக விழாவில் 10-ம் வகுப்பு மாணவி மாயம்
- மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாசிமக இருளர்களின் குலதெய்வ விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
- கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் கலந்து விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டபோது மாணவி திடீரென மாயமானார்.
மாமல்லபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி கடந்த 6-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாசிமக இருளர்களின் குலதெய்வ விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் கலந்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டபோது மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story






