search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய பள்ளி, கல்லூரி  மாணவ-மாணவிகள்
    X

    மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்

    • கடல்சார் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென் பகுதி கடலோரத்தில், குவிந்து கிடந்த குப்பைகளை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்க திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இணைந்து அனைத்து வகை குப்பை கழிவுகளையும் அகற்றினர்.,

    பின்னர் கடல்சார் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அதிகாரி உதயகுமார், நிர்வாக தலைவர் சங்கர், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×