என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி
- ஓசூரில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
- ஒசூர் டவுன் போலீசார் நடவடிக்கை
ஓசூர் தேர்பேட்டை விநாயகர் கோவில் அருகில் வசித்து வருபவர் வினோத் குமார்(வயது 26). இவரிடம் இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி வாங்கி தருவதாக ஓசூரை சேர்ந்த பத்மா, மற்றும் ஓசூர் வள்ளலார் நகரை சேர்ந்த சிவா (50), ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி ஹட்கோ பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் ரூ.8 லட்சம் பெற்றிருந்தனர்.
மேலும் இதற்காக போலியாக ஆணையும் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஆணை போலி என தெரிய வந்ததும், வினோத்குமார் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத்குமார், இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் பத்மா, சிவா, ஸ்ரீதர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று சிவா மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.






